Published On: Thursday, October 06, 2011
தேர்தல் பகுதி பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் சனிக்கிழமை 8ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் பிரதேசங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் 7ஆம் திகதியன்று மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இத்தேர்தலில் வாக்கெண்ணும் நிலையங்களாக குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பாடசாலைகள் 9ஆம் திகதிவரை மூடப்படுமெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க வித்தியாலயம் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையும், கம்பஹா தக்ஷிலா மகா வித்தியாலயம், ஹம்பாந்தோட்டை சுவி தேசிய பாடசாலை என்பன 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையிலும், பதுளை விசாகா மகளிர் மகா வித்தியாலயம் 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையிலும் மூடப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தல் தினமான 8ஆம் திகதி தேர்தல்கள் நடைபெறும் மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் எனவும் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.