Published On: Thursday, October 06, 2011
சிறந்த பஸ்நிலையம் நீர்கொழும்பில்


நீர்கொழும்பில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்ட பிரதான பஸ் நிலையத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை (04.10.2011) அன்று திறந்துவைத்தார்.
22 மில்லியன் ரூபா செலவில் 68 கடைகள், சினிமா தியேட்டர், வரவேற்பு மண்டபத்துடனும் 2 மாடிகளை கொண்டதாக இந்த பஸ் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பிரதான பஸ் நிலைய திறப்பு விழாவில் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, அமைச்சர்களான மேர்வின் சில்வா, பீலிக்ஸ் பெரோ, பிரதியமைச்சர் சரத்குமார குணரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த பஸ்நிலையத்தை திறந்துவைத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ உரையாற்றுகையில்; கம்பஹா மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாவட்டத்தில் உள்ள நகரங்கள் முன்னேற்றமடைந்துள்ளன. ஆசியாவிலேயே மிகச் சிறந்த நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் நீர்கொழும்பில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. சகல மாவட்டம்களிலும் இதுபோன்ற பஸ் நிலையம் ஒன்றையேனும் அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் ஆலோசனை தெரிவித்து நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்று குறிப்பிட்டார்
நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றதன் பின்னர் நாட்டில் உல்லாச பயணத்துறைக்கு தலை சிறந்த நகரமாக நீர்கொழும்பை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளேன் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.