Published On: Thursday, October 06, 2011
முதலாவது ஹஜ் குழு பயணம்

இவ்வருடம் இலங்கையிலிருந்து புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றச் செல்லும் 157 யாத்திரிகர்களைக் கொண்ட முதலாவது ஹஜ் குழு வியாழக்கிழமை (06.10.2011) அன்று மக்கா பயணமானது. இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசியின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா, முஸ்லிம் சமய, விவகார திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி உட்பட கலாசாரத் திணைக்கள உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.