Published On: Thursday, October 06, 2011
தென்கொரிய கப்பல்கள் கொழும்பில்

தென்கொரிய கடற்படைக்குச் சொந்தமான 2 கப்பல்கள் வியாழக்கிழமை (06.10.2011) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பயிற்சி நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்த 2 கப்பல்களே கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கெங் கம் ச்செங் மற்றும் ச்சுங் ஜீ ஆகிய 2 கப்பல்களுமே சனிக்கிழமை (08.10.2011) வரை கொழும்பு துறைகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கப்பல்களில் 608 பணியாளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.