Published On: Thursday, October 20, 2011
சிட்டிசன் கிரிக்கெட் டீம் இந்தியா

உங்களுக்கு ஒண்டு தெரியுமே...? இந்தியா அணி ஒரு வித்தியாசமான அணிடாப்பா... வேற நாட்க்குப் போய் அந்த நாட்டுல விளயாடினா அங்க வெல்ல மாட்டாங்க. ஆனா சொந்த மண்ணுல விளயாடினா மட்டும் வெல்லுவாங்க. இதுல இருந்த என்ன விளங்குது..? இந்தியா டீம் இந்தியாவுலேயே தோத்துப்போனா அவங்க வீடுகளுக்குப்போக ஏலாது. ஏனெண்டா, தீவிர ரசிகர்கள் அவங்கட வீடுகளைக் கொழுத்திடுவாங்க. அந்தப் பயத்திலதான் இந்தியா டீம் இந்தியாவுல வெல்லுறதோ தெரியல.
மத்த நாடுகளுக்குப் போய் தோத்துட்டு வந்து இந்தியாவுக்கு அந்த டீம் வந்தா பழிக்குப்பழி வாங்குறதுதான் இந்தியா டீமுடைய ஸ்டைல். போன வேல்ட் கப்புல இந்தியா பாகிஸ்தான் டீம் கிட்ட தோத்துப் போயிருந்தா தெரிந்திருக்கும். இந்திய ரசிகளுடைய ரசனையும் இந்தியா டீம்ல வெச்சிருக்கிற லவ்வும். எது எப்படியோ பாகிஸ்தான் எண்டு வரும்போது மட்டும் உண்மையான எதிரியாகத்தான் நெனச்சி இந்தியா டீம் விளயாடுது. விளையாட்டு பரஸ்பரத்தை வளர்க்கும எண்டு சொல்லுறாங்க. ஆனா அதுவும் பொய்போலக் கெடக்கு.
இந்த மண்டுக்கு மண்டயில் ஒறச்சது இவ்வளவுதான் எண்டு நெனச்சிடாதீங்க. எனக்கும் கிரிக்கெட் விளயாட நல்லாத் தெரியும். ஆனா, எனக்க வயசு கூட எண்டு டீம்ல சேத்துக்க மாட்டாங்களாம். வேணும் எண்டா டீ குடுக்கிறதுக்கு சேரட்டாம். இந்த அவமானம் எனக்குத் தேவையா...?