Published On: Thursday, October 20, 2011
கடாபிட உசிரு எண்டா என்ன மதிப்பா?

ஒருத்தண்ட நாட்டுக்குள்ள போய் அவனப் புடிச்சி கொல்லுறது என்கிறது எவ்வளவு காட்டுமிராண்டித்தனம். அதுவும் ஜனாதிபதியா இருக்கிற ஒருத்தரப் புடிச்சி சித்திரவதை செஞ்சி துடிக்கத் துடிக்கத் கொல்லறதால உசிருக்கு மதிப்பும் இல்ல, மண்ணாங்கட்டியும் இல்ல. ஒரே நாட்டுக்குள்ளேயே கிளச்சிய உருவாக்கிட்டு இடைக்கால நிர்வாகம் எண்டு அதுக்குப் பெயரும் வெச்சிட்டு இப்புடி காட்டுமிராண்டித் தனம் பண்ணுறது உலகத்தை அழிக்கிறதுக்குச் சமன். கடாபியை உயிருடன் புடிச்சி துடிக்கத் துடிக்கக் கொன்டவங்க கடாபி மக்களுக்கு செய்த சேவைகளையும் பாலைவன ஆற்றுத்திட்டத்தையும் அழிப்பாங்களா...?
ஒத்தனுடைய உயிரைப் பறிக்கும் அதிகாரம் உலகத்துல எந்த மனிசனுக்கம் வழங்கப்படல்ல. எவனும் எவனுக்கம் எமனாக முடியாது. அவன்ட ஆட்சி புடிக்காட்டி அவனக் கொல்லுறது இந்த உலகத்துல எவ்வளது சர்வசாதரணமாப் போயிட்டு தெரியுமா? இதுக்குக் காரணம் உலகப் பொலிஸ்காரன் அமெரிக்கா ஊடக அனுசரணை வழங்குறதுதான். லிபியா இடைக்கால நிர்வாகம் கடாபி நடந்த மோதலி்ல்தான் கொல்லப்பட்டார் எண்டு பீலா விடுது. கடாபியை கொல்லுற வீடியோவைப் பாத்த நம்ம எல்லோரையும் மடயன் எண்டு சொல்லுது. எப்புடிப் பார்த்தாலும் குற்றம் குற்றமே.