Published On: Thursday, October 20, 2011
காங்கிரஸுக்குள்ள உள்வீட்டுச் சண்டை

மரணிச்ச அஷ்ரப் இருக்கேக்க முஸ்லிம் காங்கிரஸ் எண்ட ஒரு கட்சி மட்டும்தான் இருந்திச்சி. ஆனா அந்த மனிஷன் போனதுக்குப் பொறகு துண்டு துண்டா ஒடஞ்சி போச்சி. இரிந்தாலும் ரவூப் ஹக்கீம் அதே பெயரோட காங்கிரஸ வெச்சிக்கிட்டு வருறாரு. ஆனா, இப்போ அந்த குட்டிக் கட்சிக்குள்ளயும் உள்வீட்டுச் சண்டை நடக்குது பாருங்க. கல்முனயில உள்ளூராட்சித் தேர்தல்ல நிசாம் காரியப்பரை மேயராக்கப்போய், கடைசியில சிறாஸ் எண்டு சொல்லுறவர் கூடுதலா வோட்டு எடுத்ததால திங்கவும் முடியாம துப்பவும் முடியாம தலைவர் தடுமாறினார்.
கல்முனையின்ட மேயர் பதவில யாருக்கு மேயர் எண்டு பெரிய அமளிதுமளியே நடந்திச்சி. ஆனா தலைவர் நிசாம் காரியப்பரைத்தான் மேயராக்க இருந்தார். சிறாஸ் வந்ததால பெரிய பிரச்சின ஆயிடிச்சி. சாய்ந்தமருலயும் கடையெல்லமாம் அடச்சி ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க. இந்த டைம்ல நீதி அமைச்சர் (தலைவர்தான்) ஆளுக்கு ரெண்டு வருஷம் எண்டு பிரிச்சிக் குடுத்திட்டாரு. இதுல இருந்து என்ன விளங்குதெண்டா இவர்தான் உண்மையான நீதி அமைச்சர்.
கல்முன எம்.பி. ஹரீஸ் காங்கிரஸோட முரண்படுறதாகவும் அவர கட்சியில இருந்து விலக்கச் சொல்லியும் பிரச்சினைகள் நடக்குது பாருங்க. ஆனா, ஒண்டு தெரியுமா முஸ்லிம் கட்சிகள் அஷ்ரப் போனத்துக் பொறகு எந்தக் காலத்திலயும் ஒத்துமையாக இருக்காது எண்டு நான் அடிச்சி சொல்லுவன். ஒரு வீட்டுக்குள்ளேயே கறி்ச்சிட்டி சண்டை. எலக்ஸன் டைம்ல காங்கிரஸ்ல எலக்ஷன் கேக்கிற ஒருவர் இன்னொருவருக்கு எதிரா பிரச்சாரம் பண்ணினாங்க. இந்தக் கொடுமைய எங்கபோய்ச் சொல்ல...? அதுக்குள்ளேயே நெறயப் பாட்டி இருக்கிறாங்க.