Published On: Friday, October 07, 2011
தெற்காசிய கடற்கரை விளையாட்டு போட்டி

இலங்கையில் நடைபெறும் முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டு போட்டி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் ௦08.10.2011 அன்று கோலாகலமாக அரம்பித்து வைக்கப்பட்டது. இபோட்டி 14 ஆம் திகதிவரை ஹம்பாந்தோட்டை பீச் பார்க்கில் நடைபெறவுள்ளது. தெற்காசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய 8 நாடுகளில் இருந்தும் 400 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகள் ஹம்பாந்தோட்டைக்கு வருகை தந்துள்ளனர்.