Published On: Thursday, November 24, 2011
மக்களின் பார்வைக்கு ஒலுவில் துறைமுகம்
(றிஸான் முகம்மட்)
ஒலுவில் துறைமுகத்தின் பணிகள் உத்தியோகபூர்வமாக எதிர்வரும் 2012 ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்றப புதிய துறைமுகத்தின் அபிவிருத்தி நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் எண்ணத்தில் உருவான ஒலுவில் துறைமுக அபிவிருத்தி நிர்மாணப் பணிகளை பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
ஒலுவில் துறைமுகத்தின் ழூலம் தென்கிழக்குப் பிராந்திய மக்கள் பெரிதும் நன்மையடைவர் எனவும், பொருளாதார வளர்ச்சி ஏற்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய துறைமுகத்தினை அதிகளவிலான பொதுமக்கள் தினமும் பார்வையிட்டு வருகின்றனர். மக்கள் துறைமுகத்தைப் பார்வையிடுவதற்கு வசதியாக விஷேட மண்மேடு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வாரஇறுதி மற்றும் விடுமுறை நாட்களில் இங்கு வருகைதரும் மக்களின் தொகை அதிகரித்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.