Published On: Sunday, November 20, 2011
(கலாநெஞ்சன்)
2012ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பவுள்ளது. இந்த வரவு-செலவு திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டடாரத்திலிருந்து தெரியவருகின்றது.
அரசாங்க ஊழியர்களுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு ஒரு தரப்பினரும், 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு இன்னொரு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த காலங்களில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும், கஸ்டங்களை எதிர்நோக்கி வரும் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் வரவு-செலவு திட்டத்தில் குறைந்து 10,000 ரூபா சம்பள உயர்வாவது வழங்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையைவிடுத்துள்ளார்.