Published On: Saturday, March 10, 2012
நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாடுப் போட்டி வெகு விமர்சையான நடைபெற்றது. கல்லூரியின் அதிபரும் விளையாட்டு போட்டியின் தலைவருமான எஸ்.ஏ.எஸ்.எம். சம்சுதீன் மௌலானாவின் தலைமையில் நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வில், பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.எம். பைசல் காசிம் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்தே, முன்னாள் உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கே.எல். முஹம்மத் தம்பி ஆகியோருடன் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரமுகர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுகுர், கல்துன், அரபி, தாரிக் என 4 இல்லங்களிடையே இறுதிநாள் நிகழ்வில் அஞ்சல் ஓட்டம், கழகங்களுக்கு இடையிலான ஓட்டம், இல்ல அமைப்பு, வினோத உடைப்போட்டி, மாணவர் அணிவகுப்பு போன்ற போட்டிகளும் நடைபெற்றன. மரதன் ஓட்டத்தில் முதலாம் இடத்தினை சுகுர் இல்லத்தினை சேர்ந்த அப்துல்லாஹ் என்பவர் பெற்றுக்கொண்டார். அத்துடன் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் சம்பியனாக அரபி இல்லமும், கால் பந்தட்டப்போட்டியில் சம்பியனாக தாரிக் இல்லமும், கரப்பந்தட்டப் போட்டியில் சம்பியனாக அரபி இல்லமும், கபடி போட்டியில் சம்பியனாக அரபி இல்லமும், பூப்பந்தாட்டதுக்கான போட்டியில் சம்பியனாக கல்துன் இல்லமும் தெரிவாகின.
சிறந்த இல்ல அமைப்புக்கான முதலாம் இடத்தினை அரபி இல்லம் தனதாக்கிக் கொண்டது. இவ்வருடதிக்கான சிறந்த விளையாட்டு வீரராக சுகுர் இல்லத்தினை சேர்ந்த நுஷ்கி தெரிவானார். இல்லங்கள் பெற்றுக்கொண்ட மொத்த புள்ளிகளின் அடிப்படியில் அரபி, தாரிக், கல்துன், சுகுர் என்பன முறையே முதலாம், இரண்டாம், முன்றாம், நான்காம் இடங்களினை பெற்றுக்கொண்டன.