Published On: Saturday, March 10, 2012
(புத்தளம் செய்தியாளர்)
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தளம் அன்வா அமைப்பினால் அன்வா வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சியொன்று நேற்று நடாத்தப்பட்டது. அமைப்பின் தலைவி ஏ.கே.எஸ். சலீமாவின் தலைமையில் மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ.பாயிஸ், புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.கமறுதீன் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.