எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Monday, May 05, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, February 15, 2012

'ஒரே தேசம் ஒரே குரல்' என்ற அடையாளத்தின் கீழ் SLT

Print Friendly and PDF


தேசிய தொலைத் தொடர்புகள் சேவை வழங்குநரான ஸ்ரீலங்கா ரெலிகொம் (SLT), இலங்கையின் 64ஆவது வருட சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் வகையில், “ஒரே தேசம், ஒரே குரல்” என்பதன் கீழ் வர்த்தக பிரசாரம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையின் ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத்தொடர்புகள் சேவை வழங்குநர் என்ற வகையில், இலங்கையர்கள் அனைவருக்கும் தொழில் நுணுக்க வசதியை வழங்கும் நோக்குடன், புத்தாக்கம் மிக்க மற்றும் உற்சாகமான தொலைத்தொடர்புகள் அனுபவங்களை வழங்குவதே ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் தூரநோக்கமாக உள்ளது.

“இலங்கை மக்களுக்கு சிறந்த சாத்தியமான தொலைத்தொடர்புகள் தீர்வுகளை கற்பிப்பது மற்றும் வசதியளிப்பதே இந்த பிரசாரத்தின் ஊடாக எமது குறிக்கோளாக உள்ளது. மெகாலைன், ஸ்ரீலங்கா ரெலிகொம் அகண்றபட்டை அலைவரிசை மற்றும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் பராமரிப்பு சேவைகள் போன்ற ஸ்ரீலங்கா ரெலிகொம்மினால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து மேலதிக சேவைகளையும் அது உள்ளடக்கும். நாடு முழுவதிலும் உள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையின் ஊடாக எமது அர்ப்பணிப்பினை நாம் உறுதி செய்கின்றோம்.” என ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் பிரதம நிறைவேற்றதிகாரி கிரெக் யங் தெரிவித்தார்.

புதிய பிரசாரத்தின் அறிமுகமானது, மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் நலன் மற்றும் விற்பனைக்கு பின்னரான சேவைகள், IVR உள்ளடக்க சேவைகளான வாழ்த்துக்கள், கட்டண பட்டியல், தகவல், அதிர்ஷ்ட பெட்டி, இணையம் சார்ந்த அழைப்புக்கள், வீட்டு PBX, அனைத்து சேவைகளுக்கும் ஒரே இலக்கம், தூர இருந்து இயக்கும் கட்டுப்பாட்டு முறை மற்றும் தொகுதியான பொதி போன்ற பெறுமதி சேர் சேவைகளின் அறிமுகத்துடன் ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் பிரதான மெகாலைன் இணைப்பினை மேம்படுத்தல் மற்றும் புதுப்பித்தல் உள்ளடங்கலாக தற்போதுள்ள உற்பத்திகள் மற்றும் சேவைகளில் வேறு விரிவாக்கங்கள் என்பவற்றை உள்ளடக்கியிருக்கும்.

புதிய பொதி தொகுதிகளின் அறிமுகத்துடன், அனைத்து இலங்கையர்களுக்கும் சேவையை மேலும் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஸ்ரீலங்கா ரெலிகொம் அகண்றபட்டை அலைவரிசை சேவையில் புதிய பெறுமதிகளை அறிமுகப்படுத்துகின்றது. அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கான சலுகை அடிப்படையிலான விசேட பொதிகளும் உள்ளன. நாடு முழுவதிலும் Wi-Fi மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றுமொரு இணைப்பாக உள்ளது. அத்துடன், அகண்றபட்டை, அழைப்பு சேவை மற்றும் இணைய வடிகட்டல் சேவைகளின் அளவினை கேள்விக்கு ஏற்ற வகையில் விரிவாக்கல் என்ற வடிவிலும் சேவைகளில் பெறுமதி சேர்க்கப்பட்டுள்ளது. தமது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகள் மற்றும் வீடியோ அழைப்புக்கள் போன்ற மேம்படுத்தப்பட்ட சேவைகளின் ஊடாக தமது முழுமையான ஆதரவை வழங்க ஸ்ரீலங்கா ரெலிகொம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி என புதிய கட்டத்தை நோக்கி இலங்கை வேகமாக முன்னேறி வருகின்ற நிலையில், தேசியத் தொலைத் தொடர்புகள் சேவை வழங்குநர் என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா ரெலிகொம்மானது, தொலைத் தொடர்புகள் சேவைகளை வழங்குவதன் ஊடாக அந்த வளர்ச்சிக்கு சக்தி அளிக்கின்றது.  அத்துடன், இலங்கையின் பரந்தளவிலான தொலைத் தொடர்பு இயலுமைகள் நாடு முழுவதிலும் பரந்துள்ள அனைவருக்கும் அறிவு மற்றும் தகவல் வழங்குவதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. 

வெளியிடுவோர்: Arc Worldwide Sri Lanka; a part of Leo Burnett Solutions Inc.
சார்பில்: ஸ்ரீலங்கா ரெலிகொம்

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
Caryll Van Dort தொலைபேசி இல: +9411 – 2372080
தொலைநகல்: +9411 – 2372088
மின்னஞ்சல்: caryll.van.dort@lk.arcww.com

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452