Published On: Saturday, March 10, 2012
(எம்.ரி.எம்.பாயிஸ்)
மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிமனைக்குட்பட்ட பதுரியாநகர் அல்-மினா வித்தியாலயத்தின் முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் ஜெயினுல் ஆப்தீன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஒட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட், பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஒட்டமாவடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.சுபைர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.
இரண்டு இல்லங்களை கெண்ட இவ்விளையாட்டுப் போட்டியில் பச்சை நிற அறபா அணி 199 புள்ளிகளை பெற்று நீல நிற மினா அணியை 41 புள்ளிகளால் வெற்றி கெண்டது. இவ்விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதேச இளைஞர் ஒருவரால் தீ பத்தம் சூழற்றப்பட்டமையும் கிராமிய கலை மன்றத்தின் கோலட்ட வரவேற்பும் இதன் விஷேட அம்சமாகும்.