Published On: Tuesday, November 22, 2011
2008 நவம்பர் 26ஆம் திகதி மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அமீர் கசாபுக்கு இதுவரை 16.17 கோடி ரூபாயை மகாராஷ்டிர அரசு செலவழித்துள்ளது. சிறையில் சிறப்பு அறை கட்டியது, பாதுகாப்புக்கு இந்தோனேசியா - திபெத் எல்லை பொலிஸாரை ஈடுபடுத்தியது, அவரது பாதுகாப்பு, உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கான செலவினங்களும் அடங்கும்.
எதிர்காலத்திலும் இந்த செலவில் எந்த மாற்றமும் இல்லை. கசாபின் பாதுகாப்பு முக்கியமாக உள்ளதால் செலவு செய்துதான் ஆக வேண்டும். அவர் நல்ல உடல்நிலையுடன் இருக்கவேண்டும் என்பதற்காக 2008ஆம் ஆண்டில் இருந்து இதுவரை அவருக்கு ரூ 26,953க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மகாராஷ்டிர மாநில உள்துறைச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.