Published On: Tuesday, November 22, 2011
சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட கிருமித் தொற்று இரத்த அழுத்தக் குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அப்பலோ மருத்துவமனையில் நேற்று இரவு சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர் தேவராஜன் தலைமையிலான மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். சிகிச்சையை அடுத்து அவர் தற்போது உடல் நலம் தேறியுள்ளார்.
இதையடுத்து இன்று கருணாநிதி வீடு திரும்பினார். கருணாநிதி நலமுடன் உள்ளதாக தி.மு.க. வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.