எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Friday, May 30, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, February 29, 2012

இங்கிலாந்து 'திரில்' வெற்றி பெற்று கோப்பை வென்றது; பாக்., பரிதாபம்

Print Friendly and PDF


பாகிஸ்தான் அணிக்கு எதிரான 'டுவென்டி-20' போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்ற இங்கிலாந்து, கோப்பை வென்றது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்றாவது "டுவென்டி-20' போட்டி, அபுதாபியில் நடந்தது. "டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பிராட், பேட்டிங் தேர்வு செய்தார். 

பீட்டர்சன் அபாரம்:
இங்கிலாந்து அணிக்கு கீஸ்வெட்டர் (17) சுமாரான துவக்கம் தந்தார். போபரா (1), மார்கன் (9), பெர்ஸ்டவ் (3), பட்டர் (7) ஒற்றை இலக்க ரன்களில் திரும்பினர். ஒரு முனையில் விக்கெட் சரிந்த போதும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பீட்டர்சன், அரைசதம் அடித்தார். சமித் படேல் 16 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டும் எடுத்தது. பீட்டர்சன் (62) அவுட்டாகாமல் இருந்தார்.

"திரில்' வெற்றி:
போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு, ஹபீஸ் "டக்' அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். ஜியா 23, ஆசாத் சபிக் 34 ரன்கள் எடுத்தனர். உமர் அக்மல் (22) நிலைக்கவில்லை. கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. 

டெர்ன்பாக் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன், இரண்டாவது பந்தில் 1 ரன், அப்ரிதி (3) ரன் அவுட்டானார். அடுத்த 3 பந்துகளில், 4 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை. பந்தை எதிர்கொண்ட கேப்டன் மிஸ்பா (28) போல்டாக, இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது.இதையடுத்து 2-1 என தொடரை வென்ற இங்கிலாந்து அணி கோப்பை வென்று அசத்தியது. 

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452