Published On: Thursday, March 08, 2012
வீரத்திடல் அல்-ஹிதாயா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு அண்மையில் பாடசாலை மைதானத்தில் அதிபர் எம்.எல்.வதூர்த்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் அறபா இல்லம் முதலாமிடத்தையும், ஹிரா இல்லம் இரண்டாமிடத்தையும், சபா இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.பைசல் காசீம், அதிதிகளாக கோட்ட கல்விப் பணிப்பாளர் பி.கருணாபிள்ளை, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், சவளக்கடை பொலிஸ் அதிகாரி வி.எம்.கருணாதாச, பிரதேச சபை உறுப்பினர் எ.கே.எ.சமட் மற்றும் ஆகியோ கலந்துகொண்டனர்.


