எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Saturday, June 07, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, March 05, 2012

காதலன் தற்கொலை; அல்போன்சாவும் தற்கொலை முயற்சி

Print Friendly and PDF


நடிகை அல்போன்சாவின் காதலன் தற்கொலை செய்து கொண்டதால், துக்கம் தாங்காமல் அல்போன்சாவும் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தமிழில் பாட்ஷா, ராஜஸ்தான், தில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அல்போன்சா. கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அல்போன்சா சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இந்நிலையில் வினோத்குமார் என்பவரை காதலித்து வந்தார். கல்பாக்கத்தை சேர்ந்த வினோத் குமாரும் அல்போன்சாவுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு துபாயில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அல்போன்சா வீடு திரும்பியிருக்கிறார். இரவில் அல்போன்சாவுக்கும், காதலன் வினோத்குமாருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே ‌இன்று காலை அல்போன்சா தூங்கி எழுந்து பார்த்தபோது வினோத்குமார் வீட்டின் ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அல்போன்சா அலறியடித்து கொண்டு விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து வினாத்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ‌ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அல்போன்சாவிடம் விசாரனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் காதலன் இறந்த தூக்கம் தாளாமல் அல்போன்சாவும் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். வீட்டில் இருந்தபடி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையை உண்டுள்ளார். இதையடுத்து மயக்கம் அடைந்த அல்போன்சா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடிகையின் காதலன் தற்கொலை மற்றும் நடிகையும் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452