Published On: Friday, December 09, 2011
(புத்தளம் செய்தியாளர்)
புத்தளம் நகரசபை பிரிவில் நிலுவையாகவுள்ள ஆதன வரிகளை சேகரிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. ஆதன வரி சேகரிப்பு நடவடிக்கைக்காக புத்தளம் நகரசபை ஊழியர்கள் முழுமையாக ஈடுபடுத்தப் பட்டுள்ளதோடு, அவர்கள் நிலுவை ஆதன வரிகளை வீடு வீடாக சென்று சேகரித்தும் வருகின்றனர்.
இந்த ஆதன வரி நிலுவைகளை சேகரிக்கும் நடவடிக்கையில் நாளொன்றுக்கு சுமார் 3 1/2 இலட்சம் ரூபாய்கள் புத்தளம் நகர சபைக்கு வருமானம் கிடைத்து வருவதாக நகரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உரிய காலத்திற்குரிய ஆதன வரி செலுத்தாது நிலுவையாக உள்ள இடங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுவதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.