எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Friday, June 13, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, January 17, 2012

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், நடால் வெற்றி

Print Friendly and PDF


அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வெற்றி பெற்றனர்.
மெல்போர்ன் நகரில், 100வது அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நேற்று துவங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலகின் "நம்பர்-3' வீரரான சுவிட்சர்லாந்தின் பெடரர், ரஷ்யாவின் அலெக்சாண்டர் குட்ரியவ்ட்சேவ் மோதினர். இதில் அபாரமாக ஆடிய பெடரர் 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
நடால் அசத்தல்:
மற்றொரு போட்டியில் உலகின் "நம்பர்-2' வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், அமெரிக்காவின் அலெக்ஸ் கஸ்னட்சோவை எதிர்கொண்டார். இதில் அசத்தலாக ஆடிய நடால் 6-4, 6-1, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
வெர்டாஸ்கோ தோல்வி:
மற்றொரு ஆட்டத்தில் அவுஸ்திரேலிய பெர்னார்டு டாமிக், ஸ்பெயினின் பெர்ணான்டோ வெர்டாஸ்கோ மோதினர். இதில் வெர்டாஸ்கோ 6-4, 7-6, 4-6, 2-6, 5-7 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆண்கள் பிரிவில் நடந்த மற்ற முதல் சுற்று போட்டிகளில் அர்ஜென்டினாவின் ஜுயன் மார்டின் டெல்போட்ரோ, டேவிட் நல்பாந்தியன், செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், சுவிட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா, அமெரிக்காவின் சாம் குயரே, மார்டி பிஷ், ஜான் இஸ்னர், டொனால்டு யங், ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோ, ஜெர்மனியின் ஆன்டிரியாஸ் பெக், டாமி ஹாஸ், தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் உள்ளிட்டோர் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.
கிளைஸ்டர்ஸ் வெற்றி:
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று போட்டியில், "நடப்பு சாம்பியன்' பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸ், போர்ச்சுகலின் மரியா ஜோயோவை சந்தித்தார். இதில் அபாரமாக ஆடிய கிளைஸ்டர்ஸ் 7-5, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் சீனாவில் லி நா, கஜகஸ்தானின் கேசனியா பெர்வாக்கை எதிர்கொண்டார். இதில் அசத்தலாக ஆடிய லி நா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் பிரிவில் நடந்த மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில், உலகின் "நம்பர்-1' வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, பெலாரசின் விக்டோரியா அசரென்கா, இத்தாலியின் பிரான்சஸ்கா ஷியவோனே, செர்பியாவின் ஜெலினா ஜான்கோவிச், போலந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா, சுலோவாகியாவின் டேனியலா ஹண்டுசோவா, சீனாவின் ஷுயாய் பெங் ஆகியோர் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தனர்.

சானியா தோல்வி
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, பல்கேரியாவின் பிரான்கோவாவை சந்தித்தார். இதில் சானியா 4-6, 2-6 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து, வெளியேறினார்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452