Published On: Wednesday, February 15, 2012
நல்ல காலம் பொறக்குது; அமலாபால்

காதலர் தின வார இறுதியில் 5 படங்கள் வெளியாகின்றன. 'காதலில் சொதப்புவது எப்படி', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'அம்புலி 3D', 'காட்டுப்புலி' மற்றும் 'உடும்பன்' ஆகிய படங்கள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
'முப்பொழுதும் உன் கற்பனைகள்' மற்றும் 'காதலில் சொதப்புவது எப்படி' ஆகிய 2 படங்களுக்கும் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இளைஞர்கள் மத்தியில் 2 படங்களின் பாடல்களுமே வரவேற்பை பெற்று இருக்கின்றன.
இரு படங்களிலும் நாயகியாக நடித்து இருக்கிறார் அமலாபால். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தில் சாருலதா என்ற சாஃப்ட்வேர் எஞ்சினியராகவும், 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் பார்வதி என்ற கல்லூரி செல்லும் பெண்ணாக நடித்து இருக்கிறார்.
2012ம் ஆண்டு தொடக்கத்தில் அவர் நடித்து வெளியான 'வேட்டை' படமும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
வெளியாக இருக்கும் இரு படங்களிலும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால், 2012 தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அமலாபால்.