Published On: Wednesday, February 22, 2012
அமைச்சர்கள் உட்பட அனைத்து ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருநாள் இராணுவப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியனது ஆரம்பத்தில் நுவரெலியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் நுவரெலியா விஜயத்தினை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக தற்பொழுது தியத்தலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு இப்பயிற்சி முகாம் மாற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட பல ஆளும் கட்சி உறுப்பினர்கள் இந்த இராணுவப் பயிற்சி முாகாமில் பங்குகொள்வர் என அந்த அறிக்கையில் மேலும் தெரியவருகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம் திகதியளவில் இம்முகாம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கென தியத்தலாவ பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.