எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Friday, June 06, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, January 26, 2012

உலகின் சிறந்த பொருளாதார வளர்ச்சியில் இலங்கை 4ஆவது

Print Friendly and PDF


சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கைபடி உலகில் 4ஆவது சிறந்த பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக இலங்கை விளங்குவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். தற்போது உலகில் சிறந்த பொரு ளாதார வளர்ச்சி மிக்க நாடாக சீனா விளங்குவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் அடுத்த வருடம் இரண்டாம் இடத்தை இலங்கை அடைய முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கையும், சீனாவும் தவிர்ந்த எல்லா நாடுகளதும் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்திரு ப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான செய்தியாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்தும் ஒரே நிலையிலேயே பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதற்கு நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளன.

2010ஆம் ஆண்டு நத்தார் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியை விடவும் 2011ம் ஆண்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெரிதும் குறைவடைந்து காணப்பட்டன. எந்தப் பொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இதன் பயனாக இக்காலப் பகுதியில் சராசரியாக நான்கு பேர் வாழக் கூடிய ஒவ்வொரு குடும்பமும் இருநூறு, முன்னூறு ரூபாவை மீதப்படுத்தக் கூடியதாக இருந்தது.

2009ஆம் ஆண்டில் வெளிநாட்டிலிருந்து நாம் கோழி இறைச்சியை இறக்குமதி செய்தோம். இப்போது கோழி இறைச்சியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யக் கூடியளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றோம்.

2010ஆம் ஆண்டில் நாம் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்தோம் இன்று வெளி நாட்டுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யக்கூடியளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளோம். இதனடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சோமாலியா நாட்டுக்கு 750 மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். சோமாலியாவுக்கென கொழும்பு துறைமுகத்தில் தற்போது அரிசி ஏற்றப்படுகின்றது.

உல்லாசப் பயணிகளின் வருகை முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு அதிகாரித்துள்ளது. வேலையின்மை, பணவீக்கம் என்பன குறைவடைந்துள்ளன. தலா வருமானம் அதிகரித்துள்ளது. டொக்டர்கள், தாதியர் உட்பட முழு சுகாதார சேவையும் மேம்பட்டுள்ளது. வீதிகள், மின் மற்றும் குடிநீர் வசதி உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகளுமே வளர்ச்சி அடைந்துள்ளன.

இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் எல்லா நாடுகளதும் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்துள்ளது. ஆனால் இலங்கை உலகில் நாலாவது சிறந்த பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக இப்போதுள்ளது. அடுத்த வருடம் இரண்டாமிடத்தை அடைய முடியுமென எதிர்பார்க்கின்றோம். ஆனால் சீனா முதலிடத்தில் உள்ளது என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் நிதியமைச்சு மற்றும் திறைசேரி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர, தகவல், ஊடக அமைச்சின் செயலாளர் டப்ளியூ. பி. கணேகல அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் நாயகம் பேராசிரியர் ஆரியசேன அத்துகல மற்றும் அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.

Related News

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452