எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Monday, June 09, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, January 29, 2012

கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு சாமஸ்ரீ தேசகீர்த்தி விருது

Print Friendly and PDF


எழுத்தாளரும் கவிஞரும் ஊடகவியளாரும் துருவம் செய்தியாளருமான கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. சாமஸ்ரீ பட்டமளப்பு விழா நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு இரத்தினபுரி சத்தார் மண்டபத்தில் நடைபெற்றது.

கலாநெஞ்சன் ஷாஜஹான் இதுவரை இரண்டு கவிதை தொகுதிகளையும் இரண்டு இஸ்லாமிய பாடல்கள் தொகுதிகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். அத்துடன், அச்சு இலத்திரனியல் ஊடகங்களில் கவிதை பாடலாக்கம் சிறுகதை கட்டுரை விமர்சனங்கள் என பல்வேறு இலக்கியப் படைப்புக்களை தொடர்ந்து எழுதிவருகிறார். தேசிய தமிழ் நாளிதழ் ஒன்றில் பிரதேச ஊடகவியலாளராகவும் பலவருடகாலமாக பணியாற்றி வருகிறார்.

இவர், தொலைக்காட்சி, வானொலி, மற்றும் மேடைகளில் இடம்பெற்ற கவியரங்க நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்பற்றியுள்ளதுடன் இவரது பேட்டிகளும் அந்த ஊடகங்களில் பல தடவைகள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன. தேசிய ரீதியில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகள் பலவற்றில் இவர் பல விருதுகளையும் பரிசில்களையும் பெற்றுள்ளார்.


கலாநெஞ்சன் ஷாஜஹான் அதிபர் சேவையை (தரம் 2-II) சேர்ந்த உத்தியோகத்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related News

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452